ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட 30 லட்ச ரூபாயை நன்கொடையாக சமீபத்தில் வழங்கி இருந்தார். அவரது நன்கொடையால் உந்தப்பட்ட பவன் கல்யாணை வைத்து படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள், தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் சிலர் ஒன்றாக 54 லட்சத்து 51 ஆயிரம் ரூபாயை ராமர் கோயில் கட்ட நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.
தயாரிப்பாளர்கள் ஏஎம் ரத்னம், ராதாகிருஷ்ணா, தில் ராஜு, நவீன் எல்நேனி, பண்டலா கணேஷ் ஆகியோர் அந்தப் பணத்தை பவன் கல்யாண் முன்னிலையில் வழங்கினார்கள். இத்தகவலை பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் வெளியிட்டுள்ளார்கள்.
ஆந்திர மாநிலத்தில் இந்து மக்களுக்காக அதிகம் குரல் கொடுக்கக் கூடிய நடிகர்களில் ஒருவராக பவன் கல்யாண் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவர் நன்கொடை அளித்ததைத் தொடர்ந்து பலரும் அது போல நன்கொடை வழங்கி வருகிறார்கள்.




