ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்த விஜய்சேதுபதி, சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் அங்கு இன்னும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். இதை சமீபத்தில் நடைபெற்ற உப்பென்னா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கண்கூடாக பார்க்க முடிந்தது. உப்பென்னா படத்தில் கதாநாயகியின் தந்தையாக வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி.
ஆனால் சமீபத்தில் வெளியான டிரைலரில் விஜய்சேதுபதிக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் குரல் அவருக்கு அவ்வளவாக பொருந்தவில்லை என்கிற விமர்சனம் ரசிகர்களிடம் எழுந்தது. இந்தநிலையில் இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார் படத்தின் இயக்குனர் புஜ்ஜிபாபு.
“இந்தப்படத்தில் நடிக்கும்போதே இந்த கதாபாத்திரத்திற்கு தனது குரல் செட்டாகாது என கூறிவிட்டார் விஜய்சேதுபதி. அதனை தொடர்ந்து பல டப்பிங் கலைஞர்களை பேசவைத்து பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை. இறுதியாக ரவிசங்கரை வைத்து டப்பிங் பேசவைத்தோம். எந்த படத்திற்கும் ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்துவிடும் ரவிசங்கர், இந்தப்படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்துடன் பொருந்த வேண்டும் என்பதற்காக மூன்று நாட்கள் டைம் எடுத்துக்கொண்டு டப்பிங் பேசி கொடுத்தார்” என கூறியுள்ளார் இயக்குனர் புஜ்ஜிபாபு