வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் தலைவி என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதனை ஐதராபாத்தை சேர்ந்த விஷ்ணுவர்த்தன் இந்தூரி 5 மொழிகளில் தயாரித்து வருகிறார். ஜெயலலிதா கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் நடிக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.
இந்த படத்தின் பணிகள் முடிந்து தற்போது டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. விரைவில் தணிக்கை குழுவிற்கு செல்ல இருக்கிறது. இந்த படம் மற்றும் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கும் தி குயின் வெப் சீரிஸ் ஆகியவற்றுக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். தலைவி படத்திலும், தி குயின் வெப் சீரிசிலும் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தவறாக சித்தரிக்கப்படுவதாக அவர் தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நேற்று மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.