காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் |

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'எனிமி'. இப்படத்தில் ஆர்யாவின் தோற்றப் புகைப்பட போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. போஸ்டரைப் பகிர்ந்த ஆர்யா, “என்னுடைய எதிரி விஷாலை முழு கோபத்துடன் எதிர்க்கத் தயாராகிவிட்டேன்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள விஷால், “என்னுடைய அபிமான எதிரி ஆர்யா. இந்தப் படத்தில் நான் உன்னை விரும்பவில்லை என நினைக்கிறேன். ஆனால், நிஜ வாழ்கைகியில் உன்னை எப்போதும் நேசிக்கிறேன். இந்த படத்தில் உன்னுடைய பவர் அனைத்தையும் சேர்த்து என்னை எதிர்க்கத் தயாராக இரு. இந்தப் படத்திற்காக நான் நட்பை எடுத்துக் கொள்ளப் போவதில்லை,” எனக் கூறியுள்ளார்.
'அவன் இவன்' படத்திற்குப் பிறகு விஷால், ஆர்யா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் இது. 'அரிமா நம்பி, இரு முகன், நோட்டா' படங்களுக்குப் பிறகு ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்கி வருகிறார்.