ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா |
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த புரோட்டா காமெடி மூலம் பிரபலமானவர் சூரி. அதையடுத்து படிப்படியாக வளர்ந்து தன்னையும் ஒரு முன்னணி காமெடியனாக சினிமாவில் நிறுத்திக்கொண்ட சூரி, தற்போது வெற்றிமாறன் இயக்கும் படத்தில் முதன்முறையாக நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
நீண்டகாலமாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைத்து வந்த இளையராஜா சமீபத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் புதிய ரெக்கார்டிங் தியேட்டர் ஒன்றை திறந்துள்ளார். அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதோடு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் படத்தின் ஒலிப்பதிவையும் தொடங்கினார் இளையராஜா. இந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி, சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து தனது டுவிட்டரில் இளையராஜாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ள சூரி, ஐயா இசையின் ராஜா இளையராஜா, வெற்றிமாறன் அண்ணன் மற்றும் மாமா விஜய் சேதுபதி உடன் இன்று(நேற்று) எங்கள் படத்தின் பாடல் பதிவு துவங்கியது. இது என் வாழ்வின் மிக முக்கியமான தருணம் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சூரி.
இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். அவர் கூறியதாவது: சூரி நாயகனாக நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பது பெரிய சந்தோஷம். வெற்றிமாறனோடு வடசென்னை படத்தில் பணியாற்றியிருக்க வேண்டியது. சில காரணங்களால் அது நடக்கவில்லை. இப்போது அது நடந்து வருவது, மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறார் என்றார்.
வெற்றிமாறன் கூறியதாவது: சூரி நடிக்கும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடித்துள்ளோம். படத்தின் கதை நாயகன் சூரிதான், கதாநாயகன் விஜய் சேதுபதி. சூரியின் மீதுதான் முழுக் கதையும் நடக்கும். அந்தக் கதையில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்கிறார்.