காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன். மிகப்பெரிய வெற்றிபெற்ற இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக பலமுறை சம்மன் அனுப்பியும் இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராகவில்லை. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தாக தகவல்கள் வெளியானது.
இந்த பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி இயக்குனர் ஷங்கர் சார்பில் நேற்று எழும்பூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், இயக்குனர் ஷங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை நோட்டீஸ் அனுப்ப மட்டுமே உத்தரவிடப்பட்டது. இ-கோர்ட் இணையதளத்தில் தவறான தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது நீக்கப்படும். என்று அறிவித்தது.
இதை தொடர்ந்து ஷங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது: எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனது வழக்கறிஞர் நீதிமன்றத்தை அணுகி இந்தச் செய்தி குறித்து அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். எனக்கெதிராக அப்படி எந்த வாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக நீதிபதி உறுதி செய்தார்.
இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது, அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. சரிபார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விஷயம் எனது குடும்பத்துக்கும், நல விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சலைத் தந்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.