லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா | பிரியதர்ஷனின் ‛ஹைவான்' ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் | ராமன் தேடிய சீதை, பாட்ஷா, குடும்பஸ்தன் - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

அனுஷ்கா நடித்த நிசப்தம் படம், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அமேசான் பிரைமில் வெளியான நிலையில் அடுத்து அவரைத்தேடி சகுந்தலம் உள்பட சில பட வாய்ப்புகள் சென்றன. ஆனால் அவற்றை தவிர்த்து வந்தார். இந்நிலையில் தற்போது யுவி கிரியேசன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அனுஷ்கா. ரமேஷ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இப்படம் குடும்பப் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறது. இந்த படத்தில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடிக்கிறார். தற்போது 39 வயதாகும் அனுஷ்கா, கிட்டத்தட்ட அதே வயது கொண்ட ஒரு பெண் நிஜ வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளை உள்ளடக்கிய கதையில்தான் நடிக்கிறாராம். இப்படம் தெலுங்கு, தமிழில் தயாராகிறது.