தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
பேவாட்ச் திரைப்படங்கள், தொடர்கள் மூலம் உலகம் முழுக்க ரசிகர்களை கட்டிப்போட்டவர் பமீலா ஆண்டர்சன். 53 வயதானலும் இப்போதும் அவர் கவர்ச்சி கன்னிதான். சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் சமூக வலைத்தளங்களில் தனது ரசிகர்களை தொடர்ந்து திருப்பதிபடுத்தி வருகிறார்.
அவரது சினிமா வாழ்க்கை எப்படி இருந்தாலும், சொந்த வாழ்க்கை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். முதன் முறையாக டாமி லீ என்பவரை மணந்தார். 1995 முதல் 1998 வரை வாழ்ந்து அவருக்கு 2 குழந்தைகளை பெற்றெடுத்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு 2006 ஆம் ஆண்டில் கிட் ராக் என்பவரை மணந்தார். அதற்கு அடுத்த ஆண்டிலேயே தயாரிப்பாளர் ரிக் சாலமன் என்பவரை மணந்தார். 2020 ஆம் ஆண்டில் தொழிலதிபர் ஜான் பீட்டர்ஸை மணந்தார்.
4 பேரை திருமணம் செய்தும் அவருக்கு ஏனோ திருமண வாழ்க்கை திருப்தியாகவே அமையவில்லை. இனி ஆடம்பர வாழ்க்கை தவிர்த்து இயற்கையோடு வாழப்போகிறேன். இனி சமூக வலைத்தள பக்கங்களிலும் இருக்க மாட்டேன் என்று அறிவித்து விட்டு தலைமறைவானார்.
இந்த நிலையில் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு வெளியில் வந்துள்ள பமீலா ஒரு ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தான் தற்போத தனது மெய்காப்பாளர் டான் ஹேஹர்ஸ்ட்டை திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
"என்னை நிஜமாக விரும்பும் ஒருவரின் கரங்களில் நான் இப்போது தஞ்சம் அடைந்துள்ளேன், கடந்த ஒரு வருடமாக அவர் எனக்கு பழக்கம். ஆனால் ஏழு ஜென்மங்கள் இணைந்து இருந்ததை போல உணர்ந்தேன். எனவே அவரை திருமணம் செய்தேன்" என்று உருகியுள்ளார் பமீலா.