தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஒரே வீட்டில் ஒன்றாக தங்கியிருந்தாலும் இருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதளப்பக்கத்தில் விரக்தியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மகிழ்ச்சி என்பது உங்கள் வேலையிலோ, உங்கள் படிப்பிலோ அல்லது ஒருவரை காதலித்து அவருடன் உறவு கொள்வதிலோ இல்லை என்பது ஒரு நாள் உங்களுக்கு புரியும். நமக்கு முன்னே நடந்து சென்றவர்களின் காலடிகளை பின்தொடர்ந்து செல்வதால் மகிழ்ச்சி கிடைத்துவிடாது. மற்றவர்களை போல் நாம் நடந்துகொள்வதால் ஒருபோதும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படாது. புதிய விஷயங்களை தேடி கண்டறிவதிலும், நம்பிக்கையிலும், நம் மனது சொல்வதை கேட்டு அதன்படி நடந்துகொள்வதிலும் தான் இருக்கிறது. நமக்கு நாம் கருணையாக இருக்கும் போது தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அது எப்போதும் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்பதை பொருத்தே அமையும். நமது மகிழ்ச்சி மற்றவர்கள் கையில் இல்லை.. அது நாம் நாமாக வாழும் போது தான் கிடைக்கிறது. மகிழ்ச்சி என்பது உங்களை பொருத்தே அமைகிறது", என விக்னேஷ் சிவன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




