ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
இந்தியத் திரையுலகத்தில் இந்த ஆண்டு வெளிவர உள்ள பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் இரண்டு தென்னிந்தியத் திரைப்படங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்', கன்னடப் படமான 'கேஜிஎப் 2' ஆகிய இரண்டு படங்களின் பட்ஜெட்டும், வியாபாரமும் மிக அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கர்நாடக மாநிலத்தை விட்டு மற்ற மாநிலங்களில் கூட அதிகம் வெளியாகாத கன்னடப் படங்களின் நிலையை 'கேஜிஎப்' படம் மாற்றியது. இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 'கேஜிஎப் 2' கடந்த வருடம் தசரா விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கொரானோ தொற்று காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போனதால் இப்போது வெளியீடும் தள்ளிப் போய்விட்டது.
ஜுன், ஜுலை மாதங்களில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இப்போதே படத்தின் வியாபாரப் பேச்சுகள் ஆரம்பமாகிவிட்டதாம். 'கேஜிஎப்' முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்திற்கான வெளியீட்டு உரிமைகளை மிக அதிக விலைக்குக் கேட்கிறார்களாம். தெலுங்கு உரிமை மட்டுமே 80 கோடி வரை பேசப்படுவதாகச் சொல்கிறார்கள்.
முதல் பாகத்தைத் தமிழில் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி வெளியிட்டது. இப்போது இரண்டாவது பாகத்திற்குப் போட்டி அதிகமாக இருக்கலாம் என்கிறார்கள். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தின் உரிமையை இங்கும் அதிகமாகவே சொல்கிறார்களாம்.
200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் கர்நாடக மாநில வசூலை விட மற்ற மாநிலங்களில் மிக அதிகமாக வசூலிக்கலாம் என எதிர்பார்க்கிறார்கள். மலையாள வினியோக உரிமையை ஏற்கெனவே நடிகர் பிருத்விராஜ் வாங்கிவிட்டார். தமிழ், தெலுங்கு உரிமைகளுக்கான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம்.