இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி |
தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து இந்திய அளவில் முன்னேறிவிட்ட நாயகனாக இருக்கிறார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். தற்போது 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வரும் பிரபாஸ் அடுத்து 'சலார், ஆதி புருஷ், நாக் அஷ்வின் இயக்கும் படம்' என தொடர்ந்து நடிக்க உள்ளார்.
இதில் 'சலார்' படத்தை 'கேஜிஎப்' பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்குகிறார். கடந்த வாரம் தான் இப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. படத்தில் ஹிந்தித் திரையுலகத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் நாயகியாக நடிக்க வைக்க நினைத்திருந்தார்களாம். ஆனால், தற்போது அந்த வாய்ப்பை தமிழ் நடிகையான ஸ்ருதிஹாசன் கைப்பற்றி விட்டதாகச் சொல்கிறார்கள்.
சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த 'கிராக்' படம் ஸ்ருதிஹாசனக்கு மீண்டும் ஒரு வெற்றியைக் கொடுத்துவிட்டது. மேலும், தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் புகழ் பெற்ற நடிகையாக இருக்கிறார் ஸ்ருதிஹாசன். எனவே அவரையே நடிக்க வைக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படி நடந்தால் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் முதல் முறையாக இணையும் படமாக இந்தப் படம் இருக்கும்.