ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் | ''முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள்'' : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள் | தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா? | 'புருஷன்' படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்! | துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்! | மீண்டும் தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்கும் லிங்குசாமி! | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போன அஜித் படம்! | ரஜினி 173வது படத்தின் முக்கிய அப்டேட்! | 63 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர் | இந்த வாரம், புதிய படங்கள் இல்லையா ? |

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் முன்னா. சங்கை குமரேசன் என்பவர் இயக்கி, நடித்துள்ளார். அவருடன் நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து, ராஜாமணி, சண்முகம், வெங்கட் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துச் செல்வன் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.ஏ.வசந்த், சுனில் நாசர் இசை அமைத்துள்ளனர், ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி சங்கை குமரேசன் கூறியதாவது: சாட்டையடித்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் பிறந்த ஒருவனுக்கு நாகரீக வாழ்கையை அனுபவிக்க ஆசை பிறக்கிறது. அதிர்ஷ்டவசமாக அந்த வாழ்கை அவனுக்கு அமைந்துவிட, அந்த வாழ்கையில் அவன் மகிழ்ச்சியாக இருந்தானா? என்பதை பேசும் படம் என்றார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இயக்குநர் வி.சேகர், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




