சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். உடல் நலம் தேறி மும்பையில் உள்ள தன் வீட்டிற்குத் திரும்பினார்.
தமன்னா, தன்னுடைய உடலழகை மிகவும் கட்டுக்கோப்பாகக் காப்பாற்றி வந்தார். கொரோனா காரணமாக கொஞ்சம் இளைத்துப் போய்விட்டார். தற்போது தொடர் உடற்பயிற்சி செய்து மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
“நீங்கள் தீவிரமாக இருக்க வேண்டியதில்லை, சீராக இருந்தாலே போதும், இரண்டு மாதங்கள் சீராக இருந்ததால், கோவிட்டுக்கு முந்தைய என்னுடைய உடலைப் பெற்றுவிட்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமிழில் தமன்னா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கில் 'சீட்டிமார், எப் 3' மற்றும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.