தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

பாலிவுட்டை போன்று கன்னட சினிமாவிலும் போதை பொருள் புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் மற்றும் கர்நாடக காவல்துறையினர் கன்னட நடிகர், நடிகைகள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 19 பேர் மீது கர்நாடக காவல் துறையினர் போதைப் பொருள்கள் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனா்.
அதைத் தொடர்ந்து நடிகைகள் இருவரையும் கடந்த ஆண்டு செப்டம்பரில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராகினி சஞ்சனா ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். சஞ்சனாவுக்கு மட்டும் அவர் உடல்நலக்குறைவை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டது.
ராகினி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ராகினியின் மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. அரசு தரப்பு மற்றும், நடிகை தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் "இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. மனுதாரர் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தியது உறுதியானால் கூட அவருக்கு 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரையே தண்டனை விதிக்கப்படும்" என்று கூறி, ராகினிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். 140 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் ராகினி இன்று அல்லது நாளை விடுதலை செய்யப்படுவார் என்று தெரிகிறது.




