இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

துருவங்கள் பதினாறு படத்திற்கு பிறகு நடிகர் ரகுமானின் மூன்றாவது இன்னிங்ஸும் வெற்றிகரமாகவே போய்க்கொண்டு இருக்கிறது. அந்த படத்திற்கு பிறகு நல்ல கதையம்சம், நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது 'சமரா' என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப்படத்தில் இன்னொரு நாயகனாக நடிகர் பரத்தும் நடிக்கிறார்.
தமிழ், மலையாளம், இந்தி என மூன்று மொழிகளில் இந்தப்படம் தயாராகிறது. இதன் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் சார்லஸ் ஜோசப் இயக்குகிறார். இரண்டாம் உலகப்போரை தொடர்புபடுத்தும் ஒரு விஷயத்தை மையப்படுத்தி இந்தப்படம், த்ரில்லராக உருவாக இருக்கிறது. தொடர்ந்து போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரகுமான், இதிலும் புலன் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார்.