உணர்ச்சிக் குவியலாய் வந்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் | ‛பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீடு கோலாகலம் : சிவப்பு கம்பள வரவேற்பில் நனைந்த திரைப்பிரபலங்கள் | டப்பிங் யூனியன் சீல் அகற்றம் | ஒய் திஸ் கொலவெறி பாடலுடன் நாட்டு நாட்டு பாடலை ஒப்பிட்ட கீரவாணி | விடுதலை படம் சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது : பவானி ஸ்ரீ | மார்ச் 31ல் ஆர்யாவின் அடுத்த பட டீசர் வெளியீடு | மீண்டும் சர்ச்சையில் நாக சைதன்யா, ஷோபிதா காதல் | போலா 2ம் பாகத்திற்கு லீட் கொடுத்த அபிஷேக் பச்சனின் சர்ப்ரைஸ் என்ட்ரி | இளையராஜா இசையில் ஹிந்தியில் உருவான மியூசிக் ஸ்கூல் | இறப்பதற்கு முன் மஞ்சு வாரியரிடம் இன்னொசென்ட் சொன்ன கடைசி வார்த்தை |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரையும் இணைத்து, ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி. இந்தப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி உருவாகிகிறது. இதில் கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க, ராமராஜு கதாபாத்திரத்தில் ராம்சரண் நடிக்கிறார்.
கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு காரணமாக இடையில் சில மாதங்கள் நிறுத்தப்பட்டிருந்த இந்தப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை இன்று(ஜன., 19) முதல் படமாக்க துவங்கியுள்ளார் ராஜமவுலி.
ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் இருவரும் ஒருவர் கையை ஒருவர் இறுக்கி பிடித்தபடி, கைகள் மட்டுமே தெரியும்படியான புகைப்படத்தை மட்டும் பகிர்ந்து கொண்டுள்ள இயக்குனர் ராஜமவுலி, “என்னுடைய ராமராஜுவும் பீமும் எதை அடைவதற்கு விரும்பினார்களோ, அதை சாதிப்பதற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப்படம் ஆங்கிலேயர் காலகட்டத்தில் நிகழும் கதை என்பதாலும் இந்த புகைப்படத்தின் பின்னணியில் ஆங்கிலயேர் கொடியும் ஏதோ ஒரு போட்டியை வேடிக்கை பார்க்கும் விதமாக காலரியில் அமர்ந்திருக்கும் கூட்டத்தையும் பார்க்கும்போது இது சண்டைக்காட்சி அல்லது பந்தய காட்சியாக இருக்கும் என்றே தெரிகிறது..