2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பிக்பாஸ் சீசன்- 4 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களில் நடிகை ரம்யா பாண்டியனும் ஒருவர். கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் 4-ந்தேதி விஜய் டிவியில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஜனவரி 17-ந்தேதியான கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்தது. இதில் வின்னராக ஆரியும், பாலாஜி இரண்டாவது, ரியோ மூன்றாவது இடங்களையும் பிடித்தனர். இந்த போட்டியில் நடிகை ரம்யா பாண்டியன் 100 நாட்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தார். கடைசி நாளில்தான் அவர் வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு சென்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கு அவரது குடும்பத்தாரும், அந்த பகுதியைச் சேர்ந்தவர்களும் அமோகமான வரவேற்பு கொடுத்தனர். இதுகுறித்த ஒரு வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன். அதில், அவர் ஒரு ஜீப்பில் இருந்து இறங்க, மேளதாளங்கள் வாத்தியக்கருவிகள், பட்டாசுகள் வெடிக்க மாலை அணிவித்து வரவேற்கிறார்கள். அதோடு, அவரை வரவேற்ற தோழிகள் நடனமாட அவர்களுடன் சேர்ந்து ரம்யா பாண்டியனும் தெருவில் இறங்கி நடனமாடிவிட்டு அதன்பிறகு தனது வீட்டிற்குள் செல்கிறார்.
அதையடுத்து வீட்டில் குடும்பத்தினர், நண்பர்களுடன் கேக் வெட்டி ரம்யா பாண்டியனின் பிக்பாஸ் 100 நாள் சாதனையை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.