மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
ஞானவேல்ராஜா தயாரிக்க, சிலம்பரசன், கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும், பத்து தல படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் முதல் போஸ்டரையும், இசையமைப்பாளர் பற்றியும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில் சிம்பு நாற்காலி ஒன்றில் அமர்ந்தபடி முகத்தை திருப்பி அமர்ந்திருக்கிறார். மற்றொரு போஸ்டரில் மற்ற நடிகர்கள் இடம் பெற சிம்பு முகம் தெரியாத அளவுக்கு உள்ளார்.
தயாரிப்பாளர் கூறுகையில், பத்து தல படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது எங்களுக்கு பெருமை.சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய ஓபிலி என்.கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். ப்ரியா பவானிசங்கர், டீஜே, மனுஷ்யப்புத்திரன், கலையரசன், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர், என்றார்.
விண்ணைத்தாண்டி வருவாயே, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பின் மூன்றாவது முறையாக சிம்புவின் படத்திற்கு இசையமைக்கிறார் ரஹ்மான். அதேப்போன்று சில்லுன்னு ஒரு காதல் படத்திற்கு பின் கிருஷ்ணாவின் படத்திற்கு இரண்டாவது முறையாக இசையமைக்கிறார்.