23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா | பிளாஷ்பேக்: நட்சத்திர ஓட்டல்களில் படமான 'வேலைக்காரன்' | பிளாஷ்பேக்: சரித்திர படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்த கண்ணாம்பா | 2026 சினிமா நிலைமை இப்படி இருக்க போகிறது : திருப்பூர் சுப்ரமணியம் சொல்லும் அதிர்ச்சி தகவல் | கோவை தமிழ் பிடிக்கும்னு கிர்த்தி ஷெட்டி சொன்னது ஏன்? |

விதார்த் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தை இயக்கியவர் சுரேஷ் சங்கைய்யா. தற்போது பிரபல காமெடி நடிகரான செந்திலை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கும் பணிகளில் இறங்கியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் அருப்புக்கோட்டையில் நடைபெற உள்ளது.
இந்த படம் குறித்து டைரக்டர் சுரேஷ் சங்கைய்யா கூறுகையில், இந்த படம் சமூகத்திற்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் கதையில் உருவாகிறது. மொத்தம் இரண்டு முக்கிய கேரக்டர்கள். அதில் செந்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இன்னொரு நடிகரை இன்னும் முடிவு செய்யவில்லை. இவர்களுடன் சேர்த்து இன்னும் 4 கேரக்டர்கள் இந்த படத்தில் உள்ளன. இந்த ஆறு கேரக்டர்களை சுற்றித்தான் படத்தின் மொத்த கதையும் நடக்கிறது.
அதோடு, இந்த படம் சீரியசான கதையில் உருவாகயிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அது உண்மையல்ல. இப்படம் கியூமரான கதைக்களத்தில் உருவாகிறது என்று கூறிய சுரேஷ் சங்கையாவிடத்தில், காமெடி நடிகரான செந்திலை நாயகனாக நடிக்க வைப்பது ஏன்? என்று கேட்டபோது, செந்தில் இந்த படத்தில் ஹீரோ அல்ல. இந்த கதையில் உள்ள இரண்டு முக்கிய கேரக்டர்களில் அவரும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். அந்த வகையில், செந்திலை இந்த படம் இதுவரை பார்க்காத ஒரு புதிய கோணத்தில் வெளிப்படுத்தும். இப்படத்திற்கான தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என்கிறார் சுரேஷ் சங்கைய்யா.