நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து விட்டது. இறுதிப் போட்டிக்கு ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேப்ரில்லா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்.
ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து போட்டியிலிருந்து வெளியேற விரும்பும் போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை வந்த நடிகர் கவின் பிக்பாஸ் கொடுத்த தொகையைப் பெற்றுக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறினார்.
இந்த சீசனிலும் அதே போல் பிக் பாஸ் குறிப்பிட்ட தொகையை வழங்க இருக்கிறாராம். இம்முறை பிக்பாஸ் கொடுக்கும் தொகையைப் பெற்றுக் கொண்டு ரம்யா பாண்டியன் வெளியேற இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. இது எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. நாளை அல்லது அதன் மறுநாள் ஒளிபரப்பாகும் எபிசோடில் இது பற்றி தெரியவரும் என எதிர்பார்க்கலாம்.
வரும் 17ம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அன்றைய தினம் பிக் பாஸ் சீசன் 4 டைட்டிலை வெல்லப் போகும் போட்டியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.