ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் தெலுங்கு ‛பேபி' | லோகேஷ் கனகராஜ் அந்த விஷயத்தில் தலையிடுவதில்லை : சிலாகிக்கும் நாகார்ஜுனா | இன்னும் ஏழே நாளில் படப்பிடிப்பு முடிகிறது: 'புஷ்பா 2' விழாவில் தயாரிப்பாளர் கொடுத்த 'குட் பேட் அக்லி' அப்டேட் | ராம் சரண் 16வது பட படப்பிடிப்பு மைசூரில் துவக்கம் | அல்லு அர்ஜுனிடம் இயக்குனர் நெல்சன் வைத்த கோரிக்கை | ரிஷப் ஷெட்டியின் இரண்டாவது தெலுங்கு படம்! | பெண்கள் பாதுகாப்பு - விஜய் வெளியிட்ட அறிக்கை | பேபி ஜான் - கவர்ச்சி புயலாக உருவெடுத்த கீர்த்தி சுரேஷ் | சீனாவில் மஹாராஜா ரிலீஸ் : முன்பதிவு எப்படி | காதல் படங்கள் குறைந்து விட்டது : கார்த்தி வருத்தம் |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் கே.வி.குகன். குஷி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு நியூ, மொழி, முனி, வெள்ளித்திரை, தோனி, பெங்ளூரு நாட்கள் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
10 வருடங்களுக்கு முன்பு இனிது இனிது என்ற படத்தை இயக்கினார். இது ஹேப்பி டேஸ் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். பிரகாஷ்ராஜ் தயாரித்திருந்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு 118 என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். இந்த திரில்லர் திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றது. பல தென்னிந்திய மொழிகளில் இப்படம் டப் செய்யப்பட்டது.
தற்போது “WWW (who, where, why)” எனும் தலைப்பில் புதிய படத்தை இயக்குகிறார். திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் ஆதித் அருண், ஷிவானி ராஜசேகர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது.
படம் பற்றி கே.வி.குகன் கூறியதாவது: இந்த படம் ரசிகர்களை பலவிதங்களில் ஆச்சர்யபடுத்துவதோடு மட்டுமல்லாமல், படத்தின் கதைப்போக்குடன் சேர்ந்து ரசிகர்களும் விடை தேடும்விதமாக அமைந்து இருக்கும். எனது முதல் தெலுங்கு மொழி படமாக வெளியான 118 படத்திற்கு, ரசிகர்கள் கொடுத்த பெரும் ஆதரவு, எனக்கு மேலும் பொறுப்புணர்வை கொடுத்துள்ளது.
118 திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாது, மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட்ட பகுதிகளிலும், நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி தான் இரு மொழிகளிலும், ஒருசேர படத்தை எடுப்பதற்கான உத்வேகத்தை எனக்கு தந்துள்ளது. தியேட்டரில் இப்படம் ரசிகர்களுக்கு புது அனுபவமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்குமென நம்புகிறேன். என்றார்.