பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் ஜனவரி14-ந்தேதி திரைக்கு வருகிறது. ஆனால் தமிழகத்தில் விஜய்யின் மாஸ்டர் படமே அதிகப்படியான தியேட்டர்களில் நாளை முதல் வெளியாக இருப்பதால், ஈஸ்வரன் படத்திற்கு குறைவான தியேட்டர்களே கிடைத்துள்ளது. அதனால் வெளிநாடுகளில் ஈஸ்வரன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு ஈஸ்வரன் படத்தை வெளியிடவும் மறுத்தனர். இதனால் ஜனவரி14-ந்தேதி ஈஸ்வரன் படம் திரைக்கு வருமா? வராதா? என்கிற பதட்டமான சூழல் நிலவியது. இதையடுத்து வெளிநாடுகளில் ஓடிடியில் ரிலீஸாகும் முடிவை ஈஸ்வரன் தயாரிப்பாளர் தற்காலிகமாக கைவிட்டார்.
இந்த நிலையில் இன்று சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தர் மீடியாக்களை சந்தித்தார். அப்போது நான் பெத்த பிள்ளை சிம்புவின் ஈஸ்வரன் படம் திரைக்கு வர வேண்டும் என்பதற்காக உங்களை சந்திக்கிறேன் என்று கண் கலங்கியபடி பேசத் தொடங்கினார். மேலும் அவர் கூறுகையில், ''ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ஆனபோதும் படத்தை வெளியிடாமல் தடுக்கும் வேலைகள் நடந்து வருகிறது. கியூப் கட்டணம் எதற்கு, எல்பிடி வரியை நீக்குங்க என்று கேட்டேன். அதோடு நான் தயாரிப்பாளர் சங்கத்தில் அவர்களை எதிர்த்து போட்டியிட்டேன். இவை எல்லாவற்றையும் சேர்த்து என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக எனது மகனின் படத்தை தடுத்து நிறுத்த ஒரு மாபியாக கும்பல் நினைக்கிறது. அதற்கான வேலைகளும் நடக்கிறது.
அதோடு, கியூப் நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் ஈஸ்வரன் படத்தை வெளியிடக்கூடாது என்று கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஈஸ்வரன் படத்தை வெளிநாடுகளில் 10 நாட்கள் கழித்து தான் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஆனால் ஜனவரி14-ம் தேதியே வெளிநாடுகளில் ஓடிடி தளத்தில் வெளியாவது போன்று நினைத்து தடுத்து நிறுத்துகிறார்கள். ஒரு பெரிய படம் பொங்கலுக்கு வருகிறது என்பதால் வேறு எந்த படமும் வெளிவரக்கூடாது என்று நினைக்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம்?. மாஸ்டர் படத்திற்கே அனைத்து தியேட்டர்களையும் கொடுத்து விட்டு ஈஸ்வரனை தடுத்து நிறுத்த முயற்சிப்பதாகவும் பேசினார் டி.ராஜேந்தர்.