ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
தமிழில் சினிமாவில் வித்தியாசமான படங்களாக தேர்ந்தெடுத்து யதார்த்த நாயகி என பெயரெடுத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இன்று(ஜன., 10) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நாளில் அவர் நடிக்கும் படத்தை பற்றிய அறிவித்துள்ளனர்.
வத்திக்குச்சி படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை, 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக எஸ்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். டிரைவர் ஜமுனா என பெயரிட்டுள்ள இப்படத்தில் கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கிரைம், த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.
இன்றைய கால கட்டத்தில், தினசரி வாழ்க்கையில்,கால் டாக்ஸி டிரைவர்களை கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து, பெண் கால் டாக்ஸி டிரைவரை, மையமாக கொண்ட கிரைம் திரில்லர் கதை என்பதை மட்டும் படக்குழு தெரிவித்து உள்ளதால், படத்திற்கு எதிர் பார்ப்பு எகிறி உள்ளது.