ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு | ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன் | ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் | கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி உடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய விஜய் | கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி |
தியேட்டர்களில், 100 சதவீத இருக்கைக்கு அனுமதி தரப்பட்ட நிலையில், மாஸ்டர், ஈஸ்வரன் படங்களை தொடர்ந்து, பல படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.இதில், சிபிராஜ் நடித்த, கபடதாரி படத்தை ஜன., 28ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். விஷ்ணு விஷால், ராணா டகுபதி நடித்த, காடன் படத்தை, பொங்கலுக்கு வெளியிட இருந்தனர். தற்போது, தேதியை மாற்றி மார்ச், 26ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனிடையே, 100 சதவீத அனுமதியுடன் தியேட்டர் திறப்புக்கு எதிர்ப்பு வலுத்துள்ளதால், படங்களின் வெளியீடு மதில் மேல் பூனையாக உள்ளது.இந்நிலையில், 'பொங்கலுக்காகவே, ஈஸ்வரன் படத்தை தயாரித்தோம். 100 சதவீதமானாலும், 50 சதவீதமானாலும், ஈஸ்வரன் படம் தியேட்டரில் திட்டமிட்டபடி வெளியாகும்' என, ஈஸ்வரன் படக்குழுவினர் கூறியுள்ளனர்.