ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

அர்ஜூன்ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தில் பணிப்பெண்ணாக நடித்து பிரபலமானவர் மராத்திய நடிகை வனிதா கராத். உடல் பருமனாக இருப்பவர்களுக்காக இயங்கி வரும் பாடி பாசிட்டிவிட்டி என்ற சமூக இயக்கத்திற்காக இவர், ஆடை ஏதும் அணியாமல் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
2021ம் ஆண்டிற்கான காலண்டருக்காக இந்த போட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது. அதற்காக எடுக்கப்பட்ட தனது நிர்வாணப் புகைப்படங்கள் சிலவற்றை சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வனிதா கராத்.
அதில் அவர், 'நான் எனது திறமை, எனது ஆர்வம் மற்றும் என் நம்பிக்கையைப் பார்த்து பெருமைப் படுகிறேன். நான் என் உடலைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் நான் நான் தான்' என அவர் குறிப்பிட்டுள்ளார். வனிதா கராத்தின் இந்த புகைப்படங்கள் அதிக லைக்குகளைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், நிர்வாண போட்டோ ஷூட்டை எப்படி பாசிடிவ்வாக எடுத்துக் கொள்ள முடியும். உடல் பருமனாக இருப்பது மருத்துவ பிரச்னை. அதை கொண்டாட எதுவும் இல்லை. இளம் தலைமுறைக்கு நீங்கள் எந்த மாதிரி செய்தியை அனுப்புகிறீர்கள்? என, பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.




