குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நாயகியரில் ஒருவராக இருந்தவர் சுகாசினி. இப்போதும் அவருக்குரிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சென்னை, திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படிப்பை படித்த பின் அப்போதைய முன்னணி ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் உதவி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தார்.
1980ம் ஆண்டு வெளிவந்த 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படம் மூலம் சுஹாசினியை நடிகையாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் மகேந்திரன். அந்தப் படம் வெளிவந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். 1988ல் இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குனராக பார்க்கப்படும் மணிரத்னத்தை திருமணம் செய்தார்.
1995ம் ஆண்டு அரவிந்த்சாமி, அனுஹாசன் நடித்த 'இந்திரா' படத்தையும், சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'புத்தம் புதுக் காலை' ஆந்தாலஜி படத்தில் 'காபி, எனிஒன்' பகுதியை இயக்கியுள்ளார். 1991ல் 'பெண்' என்ற டிவி தொடரையும் இயக்கினார்.
பாலசந்தர் இயக்கத்தில் 1986ம் ஆண்டு வெளிவந்த 'சிந்துபைரவி' படத்திற்காக சிறந்த நடிகைகக்கான தேசிய விருதையும் பெற்றார். பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.
தமிழில், “பாலைவனச்சோலை, கோபுரங்கள் சாய்வதில்லை, தாய் வீடு, பாலைவன ரோஜாக்கள், மனதில் உறுதி வேண்டும், தர்மத்தின் தலைவன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், சாக்லெட், ” ஆகிய படங்களில் குறிப்பிடும்படியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் சுஹாசினி.
நேற்று நடைபெற்ற 'மாயத்திரை' இசை வெளியீட்டு விழாவில் பேசிய சுஹாசினி “நான் திரையுலகிற்கு அறிமுகமாகி 40 வருடங்கள் ஆகின்றது. வேறு எந்தத் துறையைத் தவிர சினிமாவை மட்டுமே நான் மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதுகிறேன்,” என தன்னுடைய 40 வருட சினிமாவைப் பற்றி தெரிவித்தார்.