டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகனும், இளம் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷிற்கு, "தாண்டவம் 25வது படம். கால் சதம் அடித்த பிறகு அவருக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. எனவே, "பழைய பாடல்களை இனி ரீ-மிக்ஸ் செய்யப் போவதில்லை என, சபதம் எடுத்துள்ளார். "ஏன் இந்த முடிவு என அவரிடம் கேட்டபோது, "ஒருவர் உயிரைக் கொடுத்து உருவாக்கிய மெட்டுக்களை, ரீ-மிக்ஸ் என்ற பெயரில், ஜீவன் இல்லாமல் செய்துவிடுகிறோம். இந்த தவறை நானும் செய்துள்ளேன். செல்வராகவன் கேட்டுக் கொண்டதால், "ஆயிரத்தில் ஒருவன் படத்தில் "அதோ அந்த பறவை போல பாடலை ரீ-மிக்ஸ் செய்தேன். இனி அந்த தவறை செய்ய மாட்டேன். ரீ-மிக்ஸ் என்பது, மற்றொருவரின் கற்பனையை சிதைத்து விடுகிறது. மேலும் நம்மளோட திறமையும் எடுபடாமல் போகிறது. ஏற்கனவே ஹிட்டான பாடலை என்னதான் மாற்றிப் போட்டாலும், அதுக்கு வரவேற்பு இருக்காது என்றார்.