பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

பிரபாஸின் கல்கி 2898 ஏடி படத்திலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மெட்டா ஏஐ-க்கு குரல் கொடுத்த முதல் இந்திய பிரபலம் என்ற சாதனையை தற்போது அவர் படைத்துள்ளார்.
இதுபற்றி தீபிகா வெளியிட்ட பதிவில், ‛‛மெட்டா ஏஐ-யில் நானும் ஒரு அங்கமாகி உள்ளேன். என் குரல் நீங்கள் இனி ஆங்கிலத்தில் நீங்கள் வாய்ஸ் சேட் செய்யலாம்'' என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வாட்ஸ் அப், ரேபான் மெட்டா, ஸ்மார்ட் கண்ணாடிகள், இன்ஸ்டாகிராம் மற்றும் பல தலங்களில் அவரது தனித்துவமான குரல் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதற்கு முன்பு மெட்டா ஏஐக்கு ஜான் சீனா, ஜுடி டென்ச் உள்ளிட்ட பிரபலங்கள் குரல் கொடுத்திருந்தார்கள். இப்போது தீபிகாவின் குரலும் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த மெட்டா ஏஐ மூலம் தீபிகாவின் குரல் ஒலிக்கப் போகிறது.