ஜனநாயகன் லீக் ; தவறான குற்றச்சாட்டு : தணிக்கை வாரியம் அறிக்கை | திருட்டுத்தனமான பதிப்புகளை ஆதரிக்காதீர்கள் : ‛ஜனநாயகன்' லீக் பற்றி மமிதா பைஜூ அறிக்கை | ஜெயிலர் 2 படத்தில் பவன் கல்யாண்? | ‛தி பாரடைஸ்' படத்தில் சுப்பு வேடத்தில் கயாடு லோகர் | ஏப்ரல் 24ல் ‛சிவகாசி' உடன் ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | 75 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஓர் இரவு' | தமிழில் இதற்கு முன்பு 'லீக்' ஆன படங்கள் என்னென்ன தெரியுமா ? | 'துரந்தர்-2 'படத்திற்கு தடைவிதிக்க : நீதிமன்றம் மறுப்பு | அண்ணி மீது ஹன்சிகா வழக்கு | பிளாஷ்பேக் : அபூர்வ சகோதரர்கள் மனோரமாவிற்கு முன் காந்திமதி |

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் நடித்து வெளியான '96' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. மென்மையான காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட '96' படக் காட்சிகள், பார்ப்போர் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் கடந்து போன சம்பவங்களாக இருப்பதாக, பலரும் படத்துக்கு விமர்சனம் சொன்னார்கள்.
அப்படி எல்லோர் வாழ்க்கையிலும் வந்து போகும் காதல் மற்றும் காதல் சம்பவங்களை வைத்து, விரசம் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை வைத்து, புத்தகம் எழுதினால் என்ன என்று எழுத்தாளர் சர்வணன் கார்த்திகேயனுக்குத் தோன்றியுள்ளது. அதைத் தொடர்ந்து, அவர், '96: தனிப்பெரும் காதல்' (ஒரு திரைப்படம் குறித்த பார்வை) என தலைப்பிட்டு புத்தகத்தை எழுதி முடித்து, அதை வெளியிட்டும் விட்டார்.
தமிழ் திரையுலகம் '96' திரைப்படக் குழுவினரை பாராட்டுகிறது.