'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
வரும் பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாவது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அஜித் தனது படத்தின் எந்த ஒரு புரமோசன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார் என்பதால், படத்தின் டீஸர், பர்ஸ்ட் லுக் என்கிற அளவிலேயே அஜித் ரசிகர்கள் திருப்தி பட்டுக்கொண்டு, சோஷியல் மீடியாவிலேயே படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
ஆனால் கேரளாவில் உள்ள அஜித் ரசிகர்கள் இதற்கு ஒருபடி மேலே போய், திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தியுள்ளனர். திருவனந்தபுரம் கார்னிவல் மாலில் நேற்று மாலை இந்த நிகழ்ச்சியை நடத்திய அஜித் ரசிகர்கள், இந்த நிகழ்வில் படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் முதல் நாள் முதல்ஷோ டிக்கெட் அறிமுகம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினர்.