பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் பூமராங். இந்த படத்தில் அவருடன் மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளார்கள். பல மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகிவிட்ட இந்த படத்தின் ரிலீஸ் தேதி, அறிவிக்கும் ஒவ்வொரு நேரமும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி தியேட்டர் பிரச்சினை ஏற்பட்டு ரிலீஸ் தேதியை மாற்றிக்கொண்டே வருகிறார்கள்.
அந்த வகையில், டிசம்பர் 21-ந்தேதி கண்டிப்பாக பூமராங் வெளியாகும் என்று தான் கூறி வந்தனர். ஆனால் அந்த தேதியில் மாரி-2, அடங்கமறு, கனா என பல படங்கள் வெளியாவதால் பூமராங் பின்வாங்கி விட்டது. தற்போதைய நிலவரப்படி டிசம்பர் மாதம் 28-ந்தேதி வெளியிடயிருப்பதாக அறிவித்துள்ளனர். அதேநாளில் பூமராங் படத்தின் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி டப்பிங்கும் வெளியாகிறதாம். ஒருவேளை டிச., 21ம் தேதி வெளியாகும் படங்கள் பிக்கப் ஆனால், பூமராங், மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது.