லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய கற்பனைக் கதாபாத்திரமான ஸ்பைடர் மேன், காமிக்ஸ் புத்தகங்கள், திரைப்படங்கள் ஆகிய இரண்டிலுமே உலக அளவில் மிகப் பிரபலம். ஸ்பைடர்-மேன் தொடர்பாக 5 படங்கள் வெளிவந்துள்ளன.
தற்போது ஸ்பைடர் மேன் படம் அனிமேஷன் திரைப்படமாக வெளிவருகிறது. ஸ்பைடர்மேன் இன்டு தி ஸ்பைடர் வெர்ஸ் என்ற பெயரில் வெளியாகும் இப்படத்தின் அனிமேஷன் பணி 2014-இல் தொடங்கியது. ஏறக்குறைய 140 அனிமேஷன் நிபுணர்கள் இணைந்து இதனை உருவாக்கி உள்ளனர். சோனி பிக்சர்ஸ் இமேஜ் வொர்க்ஸ் நிறுவனம் இதனை உருவாக்கி உள்ளது.
சில புதிய விஷயங்களுடன் ஸ்பைடர்மேன் படங்களில் வரும் கதைகளையும் இணைத்து இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியில் உருவாக்கப்பட்ட ஒரு சிலந்தி, ஹீரோ மைல்ஸைக் கடித்துவிடுகிறது. அதன் விளைவாகப் பள்ளியில் அவர் புதிய சக்திகளோடு பவனி வர, பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. வில்லன் கிங்பின் (லைவ் ஸ்கிரீபர்) மேற்கொள்ளும் சில நாசவேலைகளை தடுக்க வேண்டிய பொறுப்பும் மைல்ஸின் தோள்களில் வந்து விழுகிறது. அதை அவர் எப்படிச் செய்கிறார் என்பதை அனிமேஷனில் கண்டு ரசிக்கலாம்.
பாப் பெர்செடி, பீட்டர் ராம்சே மற்றும் ரோட்னி ரோத்மேன் ஆகிய மூவரும் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர். ஆங்கிலத்துடன் தமிழ், இந்தி, தெலுங்கு மொழியிலும் வருகிற 14ந் தேதி வெளிவருகிறது.