பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் |
2.0 படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் அடுத்து வெளியாக தயாராகி வரும் படம் பேட்ட. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், மகேந்திரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
பொங்கல் வெளியீடாக வரும் பேட்ட படத்தின் சிங்கிள் டிராக் பாடலான, "மரண மாஸ்" பாடல் வெளியாகி உள்ளது. விவேக் எழுதியுள்ள இப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும், அனிருத் இணைந்து பாடியிருக்கின்றனர்.
பொதுவாக ரஜினியின் படங்களில் ஓப்பனிங் பாடல் மாஸாக இருக்கும். ஆனால் சமீபத்திய அவரது படங்களில் அந்தமாதிரி பாடல் இடம்பெறவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு, ரஜினி ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் விதமாக உருவாகி உள்ள இந்த மரண மாஸ், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வெளியான அரைமணிநேரத்தில் இந்தப்பாடலை 3.50 லட்சம் பேர் யு-டியூப்பில் பார்த்துள்ளனர்.
#MaranaMass Lyric Video from #Pettahttps://t.co/U3DplHZS2r@Rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @lyricist_Vivek @DOP_Tirru @sureshsrajan @VijaySethuOffl @Nawazuddin_S @SimranbaggaOffc @PeterHeinOffl @vivekharshan @trishtrashers
— Sun Pictures (@sunpictures) December 3, 2018