அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இந்திய சினிமாவில் வசூல் சாதனை படைத்த 'பாகுபலி', 'பாகுபலி-2' ஆகிய படங்களைத் தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் பூஜை கடந்த 11-ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்றது.
ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் இப்படத்தில் இணைந்து நடிப்பதால் இவர்கள் மூன்று பேரின் பெயர்களின் முதல் எழுத்தான 'R'ஐ வைத்து இந்த படத்திற்கு தற்காலிகமாக 'RRR' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
உண்மையில் 'RRR' என்று பெயர் வைக்கப்பட்டதற்கு காரணம் அது இல்லையாம். ராமாயணம் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது, எனவே படத்திற்கு 'ராம ராவண ராஜ்ஜியம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது, அதன் சுருக்கமே 'RRR' என்று ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் ராமர் வேடத்தில் ராம் சரண் தேஜா நடிக்க, ராவணனாக ஜூனியர் என்.டி.ஆர்.நடிக்கிறாராம். இந்தப்படத்தை கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தனய்யா தயாரிக்கிறார். இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய தீர்மானித்துள்ளார்கள்.
'RRR' படம் தமிழிலும் வெளியாகிறது. அதே தினத்தில் தான் விஜய் 63 படமும் வெளியாக இருக்கிறது. அப்படி என்றால் விஜய் படத்துடன் ராஜமவுலி படம் மோதப்போகிறதா?