Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சின்மயிக்கு பெருகும் ஆதரவு

11 அக், 2018 - 12:58 IST
எழுத்தின் அளவு:
More-Supports-to-Chinmayi

பிரபல பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை நேரடியாகவே கூறியிருக்கிறார். இதனால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சி அடைந்திருக்கிறது. வைரமுத்து, தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமை. அதனால் சின்மயிக்கு ஆதரவாக கருத்து தெரிக்க பலரும் தயங்குகிறார்கள். என்றாலும் சித்தார்த், பிரகாஷ்ராஜ், ஸ்ரீரெட்டி, சமந்தா ஆகியோர் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் கூறியிருப்பதாவது:

சித்தார்த்:


கவிஞர் வைரமுத்து மீது சில பெண்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள். இப்படித்தான் இவர்? என்று யாரையும் உடனே முடிவு செய்யாமல், அவர்களது கருத்துகளை கேட்க வேண்டும். அதேநேரம் சின்மயி வலி பெரியது. உங்கள் கோபம் நியாயமானது. என்ன நடந்தது? உண்மை என்ன என்பதை விசாரித்து வெளிக்கொண்டு வரவேண்டும். சண்டை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது அவசியம். இன்னும் நேரம் எடுத்துக்கொள்வோம். தைரியம் பெரிது.

பிரகாஷ்ராஜ்:


இந்த தொற்றுநோய், எல்லோரது வாழ்விலும் ஏற்படக்கூடியது. ஆனால் இந்த சமூகத்துக்கு அதை நீங்கள் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். பெண் பலம் மிகப்பெரியது. நீங்கள் அதை சரியாக கையாண்டிருக்கிறீர்கள். அதை வெளிக்கொண்டு வாருங்கள். உங்கள் பணி தொடரட்டும்.

ஸ்ரீரெட்டி:


ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் துர்க்கை, காளி, பார்வதி, பைரவி, சக்தி இருக்கிறார்கள். இந்த பிரச்சினையில் சின்மயி தைரியத்தை எல்லோரும் பாராட்ட வேண்டும்.

Advertisement
கருத்துகள் (55) கருத்தைப் பதிவு செய்ய
தீபாவளி போட்டியில் 4 படங்கள்தீபாவளி போட்டியில் 4 படங்கள் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள் : அதிதிராவ் அதிர்ச்சி தகவல் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (55)

meyyappan - periyakulam,இந்தியா
13 அக், 2018 - 18:12 Report Abuse
meyyappan வைரமுத்து நல்லவர் இது அப்பட்டமான பொய் ஏன் இந்த மாது தன்னை தானே அசிங்கப்படுத்தி கொள்கின்றது இது யாருடைய சூழ்ச்சி இது அரசியல் சம்பந்தம் இருக்கின்றது இவரையும் விட்டு வைக்க வில்லை உண்மை விளங்கும்
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13 அக், 2018 - 17:32 Report Abuse
Malick Raja பொய் .. பொய் இது பொய் என்றே சொல்லவேண்டும் ..கேப்பையில் நெய்வடியுமா ? வடியாது அது போல வடிகட்டிய பொய் .. இந்த penman திருமணத்திற்கு வந்தபோது காலில் விழுந்தபோது இவரின் தாயார் பள்ளிழுத்த போது இதெல்லாம் வரவில்லை .. ஆக அயோக்கியத்தனத்தை வெளிப்படுத்திவிட்டார் இந்த சினி பாடகி ..
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
13 அக், 2018 - 12:55 Report Abuse
meenakshisundaram ஸ்விற்சர் லேண்ட் நாட்டிலே பாவம் தண்ணி அடித்து விட்டு காத்துக்கொண்டிருந்திருப்பான் தனது அடியாள் அனுப்பி விட்டு அங்கே ஹோட்டல் ரெஜிஸ்டர் யை நன்கு செக் செய்யணும்.எவ்வளவு நாட்கள் தங்க பதிவு செயதிருந்தான் ,எவ்வளவு நாட்களில் பிளான் யை மாற்றினான் என்று.மேலும் arrange செய்திருந்த சுரேஷ் என்பவரையும் விசாரிக்கவும்.
Rate this:
Kumar - chennai,இந்தியா
13 அக், 2018 - 11:15 Report Abuse
Kumar இந்த பெண் கூறுவதில் உண்மை இருப்பினின் உடனடியாக வைரமுத்து மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். மகளிர் பாதுகாப்பு அமைப்புகள் தாமாகவே முன்வந்து சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை செய்யவேண்டும். Guilty should be punished. Delayed justice is denied justice.
Rate this:
Thimme Gowda - Bangalore,இந்தியா
13 அக், 2018 - 01:21 Report Abuse
Thimme Gowda கடவுளையே வேசி என்பவன் கண்ணுக்கு எல்லா பெண்களும் வேசியாகத்தான் தெரிவார்கள். இவன் தன தாய், தங்கை மற்றும் தன மகளையும் விட்டு வைக்க மாட்டான். இவனை நாடு தெருவில் வைத்து சித்திரை வதை செய்து கொள்ள வேண்டும்.
Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in