ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
அனுராக் காஷ்யப், யார் என்று சொன்னால் தமிழ் ரசிகர்களுக்கு இன்னும் தெரியுமா என்பது சந்தேகம்தான். ஆனால், 'இமைக்கா நொடிகள்' படத்தின் வில்லன் என்று சொன்னால் உடனே தெரிந்து கொள்வார்கள். பாலிவுட்டின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் நல்ல தமிழ்ப் படங்களின் காதலனும் கூட. தமிழில் நல்ல படங்கள் வரும் போதெல்லாம் அவற்றைப் பார்த்து தவறாமல் பாராட்டுவார்.
இந்த வாரம் வெளிவந்த 'பரியேறும் பெருமாள்' படத்தைப் பாருங்கள், ஆதரவு கொடுங்கள் என ஹிந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அமீர்கான் ஆகியோருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைப் பார்த்த இயக்குனர் அனுராக் காஷ்யப், 'இது என்ன படம் ?, இந்தப் படம் மும்பையில் சப்டைட்டிலுடன் ஓடுகிறதா' எனக் கேட்டிருந்தார். அவருக்குப் பலரும் பதில் சொல்லியிருந்தார்கள். மும்பையில் இந்தப் படம் ஓடும் தியேட்டரைப் பற்றி படத் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தும் அனுராக் காஷ்யப்பிற்கு பதிலளித்திருந்தார்.
தமிழ்த் திரையுலகத்தைச் சார்ந்த பலரும் 'பரியேறும் பெருமாள்' படம் பார்த்துவிட்டு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.