இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள எல்லம்பாளையம் கிராமத்திற்கு சென்றார். அங்கு செல்லும் வழியில் உள்ள நல்லதங்காள் ஓடையை பார்வையிட்ட கமல், எல்லம்பாளையத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
மக்களிடம் பேசிய கமல்ஹாசன், கிராமங்கள் தான் நகரங்களுக்கு உணவு அளிப்பவர்கள். எல்லாம் செய்தது போல சிலர் நடித்து கொண்டிருக்கிறார்கள். ஊழலை நாம் தான் ஒழிக்க வேண்டும், மக்கள் நீதி மய்யம் செய்வது மட்டுமல்ல, மக்கள் அனைவரும் இணைந்து செய்ய வேண்டும்.
படித்த இளைஞர்கள் கிராமம் நோக்கி நகர வேண்டும். நகராத்தார் எல்லாம் கிராமம் நோக்கி நகரும் காலம் விரைவில் வரும். முன்னேற்றங்கள் கிராமத்தைக் நோக்கி நகர வேண்டும், நல்லது எல்லாம் ஒன்று கூட ஆரம்பித்துவிட்டது. அதுதான் நாம் ஒன்று சேர்ந்திருப்பது என பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், இந்த சிறிய கிராமத்தில் பெரிய பணிகளை நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம், ஒரு லட்சம் மரக்கன்றுகள், மின்மயானம் அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் தத்தெடுத்த 8 கிராமங்களில் இதுவும் ஒன்று. கிராமசபை கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கிராமங்களை நோக்கி மக்கள் நீதி மய்யம் செல்கிறோம். புதைக்கப்பட்டுள்ள கிராம சபை கூட்டங்களை தோண்டி எடுத்து கொண்டிருக்கின்றோம் என்றார்.
தொடர்ந்து கிராம மக்களுடன் இணைந்து ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார் கமல்ஹாசன்.