அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

தமிழ் சினிமாவின் இசை பொக்கிஷம் இளையராஜா. 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்ட இளையராஜா எண்ணில் அடங்கா பாடல்களை தந்தவர். 75 வயதை கடந்துவிட்ட இளையராஜா, தற்போதும் படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இசைராஜா 75 (இளையராஜா) என்ற பெயரில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சி, தயாரிப்பாளர்களின் நலனுக்காக, அவர்களுக்கு உதவும் வகையில் நடத்தப்படுகிறது.
அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சிக்கான ஒப்பந்தம், இளையராஜா முன்னிலையில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர்.