தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு | உருவக்கேலி வலிகளை ஏற்படுத்தும்: பிரீத்தி அஸ்ரானி |

தமிழக காவல்துறையின் பிரபல வாசகம், "காவல்துறை உங்கள் நண்பன்". அதையே ஒரு படத்தின் தலைப்பாக்கி இருக்கிறார்கள். மோ மற்றும் அதிமேதாவிகள் படத்தை இயக்கிய ஆர்டிஎம் இயக்குகிறார். சுரேஷ்ரவி ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. மைம்கோபி, கல்லூரி வினோ முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்., ஆதித்யா - சூர்யா இசை அமைக்கிறார்கள், விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார். ஒயிட் மூவி டோன் மற்றும் பி.ஆர்.எஸ்.டாக்கீஸ் இணைந்து தயாரிக்கிறது.
"காவல்துறையை தமிழ் சினிமா தொடர்ந்து வில்லனாகவே காட்டி வருகிறது. சிங்கம் மாதிரி ஒரு சில படங்களே காவல்துறையின் பெருமை பேசுகிறது. ஒரு காவல்துறை அதிகாரிக்கும், சாதாரண மனிதனுக்கும் இடையே உள்ள பிரச்னைகளை உணர்வுபூர்வமாக பேசுகிற படமாக இது உருவாகி வருகிறது" என்கிறார் இயக்குனர் ஆர்டிம்.