2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் காற்றின் மொழி. விதார்த், தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு, குமரவேல், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா நடிக்கும் இந்த படம் ஹிந்தியில் வெளியான தும்ஹரி சுலு படத்தின் ரீ-மேக்.
பாஃப்டா நிறுவனம் சார்பில் தனஞ்சயன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் 4-ஆம் தேதி துவங்கியது. ஒரே ஷெட்யூலில் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 25-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இடைவிடாமல் நடந்துவந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் நடித்து கொடுத்துவிட்டார் ஜோதிகா. இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு மற்ற நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் தொடர்கிறது.
மொழி படத்தை தொடர்ந்து ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் என்பதால் இருவருக்கும் நல்ல புரிதல் இருந்ததாம். அதனால் பல நாட்கள் டபுள் கால்ஷீட்டில் கூட நடித்துக் கொடுத்திருக்கிறார் ஜோதிகா.
காற்றின் மொழி படத்தில் நடித்து முடித்த பிறகு நல்ல படத்தில் நடித்த அனுபவத்தைக் கொடுத்ததற்கு நன்றி என்று இயக்குநர் ராதாமோகனுக்கு வாட்ஸ்அப் பண்ணியிருக்கிறார் ஜோதிகா.