அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

திருக்குமரன் என்டர்டெயின்ட்மென்ட் மூலமாக பல படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். "அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இறைவி, முண்டாசுபட்டி, தெகிடி", உள்பட பல படங்களை தயாரித்தார். பின்பு அவரே இயக்குனராகி மாயவன் படத்தை இயக்கினார். இவர் இயக்கியுள்ள இரண்டாவது படம் கேங்ஸ் ஆப் மெட்ராஸ்.
அசோக், பிரியங்கா ருத், வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள் உள்பட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹரி டவுசியா இசை அமைத்துள்ளார்.
இது சென்னையில் வாழும் அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் பற்றிய கதை. சென்னை தாதாக்கள் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும் இது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தாதாக்கள் எப்படி உருவாகிறார்கள். அவர்கள் எப்படி வாழ்கிறார்கள். அரசியல், சினிமா உள்ளிட்ட பல துறைகளில் அவர்கள் எப்படி ஊடுருவுகிறார்கள். என்பதை பற்றி பேசுகிற படம். இதன் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. டப்பிங். பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. நவம்பரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.