அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஷெல்லி சினிமாஸ் சார்பில் செல்வகுமார், ராம் பிரகாஷ் தயாரிக்கும் படம் சகா. இதில் ஹீரோக்களின் சிறுவயது கேரக்டரில் நடித்து வந்த சரண் ஹீரோவாக நடிக்கிறார், இவர் தவிர கோலிசோடா கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, உள்பட பலர் நடிக்கிறார்கள், சபிர் இசை அமைக்கிறார், நிரன்சந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். தணிக்கை குழுவால் சான்றிதழ் மறுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு மறு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் முருகேஷ் கூறியதாவது:
சந்தர்ப்ப சூழ்நிலையால் தெரியாமல் செய்த தவறுக்காக இரு நண்பர்கள் சிறார் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அங்கு குட்டி ராஜாங்கம் நடத்தும் வில்லனால் இவர்கள் வாழ்க்கை தடம் மாறுகிறது. தெரியாமல் தவறு செய்தவர்கள் தெரிந்தே தவறு செய்ய வேண்டியதாகிறது. அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் கதை.
படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பியபோது சிறுவர்கள் வன்முறை செய்வதாக காட்டியிருக்கிறீர்கள். சிறை திருந்தும் இடம், அதை தவறு செய்யும் இடமாக காட்டியிருக்கிறீர்கள் என்று சான்றிதழ் தர மறுத்து விட்டார்கள். சான்றிதழ் வேண்டுனால் 20 நிமிட காட்சியை நீக்க வேண்டும் என்றார்கள். இதனால் மறு தணிக்கைக்கு சென்றோம். அவர்கள் 5 நிமிட காட்சியை மட்டும் நீக்க சொல்லி யூஏ சான்றிதழ் வழங்கினார்கள். அடுத்த மாதம் படம் வெளிவருகிறது. என்றார் முருகேஷ்.