2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சத்யா சிவா இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான படம் கழுகு. கிருஷ்ணா, பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் நடித்திருந்தனர். காதல் படமாக வெளிவந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் கழுகு 2 என்ற பெயரில் உருவாகிறது.
கிருஷ்ணா - பிந்து மாதவியே ஹீரோ, ஹீரோயின்களாக தொடருகின்றனர். காளி வெங்கட் முக்கிய ரோலில் நடிக்கிறார். யுவன் இசையமைக்க, சத்ய சிவா இயக்குகிறார். ஜி.கே.ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் மூணாரில் ஆரம்பமானது.