சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை | ரஜினி, கமல் பட இயக்குனர் யார்? இன்னும் தீராத சந்தேகம் | 'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங் | 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? | ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 |
‛சிதம்பர ரகசியம்', 'தெய்வமகள்' போன்ற ஹிட் சீரியல்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் நடிகர் கிருஷ்ணா. அண்மையில் நிறைவுபெற்ற தாலாட்டு தொடரிலும் நடிகை ஸ்ருதி ராஜுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அம்மா செண்டிமெண்டை மையமாக வைத்து ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்திராத வகையில் கடந்த ஜூன் 24 ஆம் தேதியோடு இந்த தொடர் திடீரென முடித்து வைக்கப்பட்டது.
இதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ள நடிகர் கிருஷ்ணா, 'நன்றாக ஓடிட்டு இருந்த சீரியலை திடீரென முடித்துவிட்டனர். இது எங்களுக்கே அதிர்ச்சியாக தான் இருந்தது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை நிச்சயம் சீரியல் ஓடும் என தான் சொல்லியிருந்தனர். பல புது சீரியல்கள் வர இருப்பதால் தான் தாலாட்டு சீரியலை முடித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார். இதனையடுத்து கிருஷ்ணாவும், ஸ்ருதி ராஜும் சீக்கிரமே புதிய சீரியலில் கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.