என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

ஒரு இரவில் நடக்கும் கதை, ஒரு நாளில், ஒரு மணி நேரத்தில் நடக்கும் கதை என்றெல்லாம் விதவிதமான படங்கள் வந்திருக்கிறது. முதன் முறையாக ஒரே திருவிழாவில் நடக்கும் கதையாக தயாராகி இருக்கிறது பக்கா படம். பேரரசுவின் உதவியாளர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கி இருக்கிறார். வருகிற 27ந் தேதி படம் வெளிவருகிறது. படம் குறித்து இயக்குர் சூர்யா கூறியதாவது:
இந்தப் படத்தின் கதை முழுக்க ஒரு திருவிழாவில் நடக்கிறது. அதனால் படம் முழுக்க வெளிப்புற காட்சிகளாகவே படமாக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம் பிரபு முதன் முறையாக இரண்டு வேடத்தில் நடிக்கிறார். ஒரு திருவிழாவில் ஒரு பிரச்னை ஆரம்பிக்கிறது. அந்த பிரச்னை திருவிழா முடிவதற்குள் எப்படி தீர்க்கப்படுகிறது என்பதுதான் கதை.
இதற்குள் காதல், காமெடி, ஆக்ஷ்ன் என எல்லா அம்சங்களும் இருக்கிறது. காமெடி தூக்கலாக இருக்கும். இரண்டு விக்ரம் பிரபு என்பதால் ஒருவருக்கு நிக்கி கல்ராணியும், இன்னொருவருக்கு பிந்து மாதவியும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர 36 நடிகர், நடிகைகள் நடித்திருக்கிறார்கள். சத்யா இசை அமைத்துள்ளார், சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது விக்ரம் பிரபுவுக்கு முக்கியமான படமாக இருக்கும். எனக்கு என் சினிமா கேரியரை வெற்றியுடன் துவக்கி வைக்கிற படமாக இருக்கும்" என்றார்.