ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா |

திருடா திருடி, பொறி, யோகி, சீடன் படங்களை இயக்கிய சுப்பிரமணியம் சிவா, அடுத்து இயக்கும் படம் வெள்ளை யானை. மினி ஸ்டூடியோ சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். ஆ.ஜெகதீசன் ஒளிப்பதிவு செய்கிறார்.
தஞ்சாவூர்காரரான சுப்பிரமணியம் சிவா, தஞ்சை பகுதி விவசாயிகளின் கதையை படமாக இயக்குகிறார். இதில் சமுத்திரக்கனி விவசாயியாக நடிக்கிறார். இந்த படத்திற்கான போட்டோ ஷூட்டை ஸ்டூடியோவில் நடத்தாமல் தஞ்சாவூரின் வயல் வெளிகளில் நடத்தியிருக்கிறார் சுப்பிரமணியம் சிவா.
படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடுகிறார்கள்.