Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முறைகேடுக்கு ஆதாரம் இருந்தால் பதில் சொல்வேன் : விஷால்

10 டிச, 2017 - 02:19 IST
எழுத்தின் அளவு:
Vishal-on-producer-counsil-meet

தயாரிப்பாளர் சங்கம் பொதுக் கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே ரகளை மற்றும் அடிதடி நடந்ததால், கூட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரத்திலேயே கூட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்து வெளியே வந்த தயாரிப்பாளர்கள் சிலர், சங்க தலைவர் விஷால் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இந்நிலையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் விஷால் ஆலோசனையில் ஈடுபட்டார். சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து விஷால் செய்தியாளர்களை சந்தித்து, கூட்டத்தில் நடந்தவைகள் குறித்து விவரித்தார்.


அப்போது பேசிய அவர், சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடந்தாலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆண்டு பொதுக் கூட்டம் நல்லபடியாக நிறைவடைந்தது. என்னவெல்லாம் நடந்தது, யார் எல்லாம் மைக்கை பிடிங்கி அடிக்க வந்தார்கள், யார் ரகளையில் ஈடுபட்டனர் என அனைத்தும் பதிவாகி உள்ளது. நீதிபதி ராமநாதன் அனைத்து நிகழ்வுகளையும் கண்காணித்தார்.


எதிர்ப்பை பதிவு செய்த முறை தவறானது. சங்கத்தில் ஊழல் என ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில் தரக்குறைவாக நடந்த செயல்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சிலர் என் மீது உள்ள காழ்புணர்ச்சி காரணமாக நடக்க வேண்டிய நல்ல விஷயங்களை நடக்க விடாமல் தடுக்கிறார்கள். முறைகேடு நடந்திருந்தார் இப்படி தைரியமாக பொதுக் கூட்டம் நடத்த முடியாது. முறைகேடு நடந்ததற்கு ஆதாரம் இருந்தால் கொண்டு வரட்டும், பதில் சொல்கிறேன். ஆர்.கே.நகர் தேர்தலில் நான் வேட்புமனு தாக்கல் செய்தது எனத தனிப்பட்ட முடிவு. நான் தேர்தலில் போட்டியிடக் கூடாது என சங்க விதியில் இல்லை. தயாரிப்பாளர் சங்கம் விதிகளின்படியே செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)