அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியிருக்கும், ஹோசான்னா பாடலுக்கு கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கவுதம் மேனன் இயக்கத்தில் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் "விண்ணைத்தாண்டி வருவாயா". சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின.
இந்நிலையில் இதே விண்ணைத்தாண்டி வருவாயா படம் இந்தியில் "ஏக் திவானா தா" என்ற பெயரில் ரீ-மேக் ஆகியுள்ளது. கவுதமே இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் உள்ள ஹோசான்னா பாடல், இந்தியிலும் இடம்பெற்றுள்ளது. இதனிடையே ஹோசான்னா பாடலுக்கு கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஹோசான்னா என்பது கிறிஸ்துவர்களின் வழிபாட்டுக்குரிய வார்த்தை என்றும், அதை காதல் பாடலில் சேர்த்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இதனை உடனடியாக படத்தில் இருந்து நீக்க வேண்டும், இல்லாவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் மற்றும் போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.