அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் |
'கபாலி' படத்தை மிஞ்சும் அளவிற்கு 3000க்கு மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ், நான்கு நாட்களுக்கும் குறையாமல் முன்பதிவு முடிவு, நான்கு நாட்களில் 100 கோடியைக் கடக்கும் வசூல், என 'விவேகம்' பற்றி கடந்த இரண்டு நாட்களாக பலவிதமான தகவல்களும், செய்திகளும் பரவிக் கொண்டிருக்கின்றன. இதற்கு முந்தைய மற்ற நடிகர்களின் எந்தப் படங்களின் சாதனையை முறியடிக்கப் போகிறதோ இல்லையோ 'வேதாளம்' படத்தின் சாதனையை 'விவேகம்' கண்டிப்பாக முறியடிக்கும் என்பதை மட்டும் முன்னதாகவே சொல்லிவிடலாம்.
அஜித்தின் இந்த 'விவேகம்' படத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு பரபரப்பு, விறுவிறுப்பு என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இப்படத்திற்குப் போட்டியாகச் செய்திகள் பரவும் 'மெர்சல்' படம், கடந்த வருடம் வெளிவந்த 'கபாலி' படத்தின் வசூல், சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து சாதனை படைத்த 'பாகுபலி 2' என காரணங்கள் உள்ளன. அஜித் அவருடைய ரசிகர்களை அமைதியாக இருக்கச் சொன்னாலும் அவர்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. ரசிகர் மன்றங்களே இல்லாமல் இத்தனை வருடங்களில் தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டம் அஜித்திற்குக் கிடைத்திருப்பது பலருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்தான்.
கடந்த ஒரு வருடங்களில் இணையப் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளதும் 'விவேகம்' பற்றிய எந்த ஒரு தகவலையும், செய்தியையும் வைரலாகப் பரவ வைத்துவிடுகிறது. அதனால், பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 'விவேகம்' படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. அதற்கு முன்னதாக இன்று இரவு மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் சிறப்பு பிரிமீயர் காட்சிகள் நடைபெறும் எனத் தெரிகிறது.
“படத்தின் அனைத்து வகையான பிரின்ட்டுகளும் டெலிவரி செய்யப்பட்டுவிட்டன. அஜித்க்கும், எனது குழுவினருக்கும் மரியாதை, அன்புடன் நன்றி” என படத்தின் இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் சமூக வலைத்தளங்களை 'விவேகம்' மிக அதிகமாக ஆக்கிரமிக்கும்.