அழகின் ரகசியம் சொன்ன ராஷ்மிகா | மார்ச் 27, 28ல் வெளியான படங்களின் நிலைமை என்ன | மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் |
சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் பிலிம் சொசைட்டி தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அதன் வைர விழாவை சிறப்பாக கொண்டாட இருக்கிறார்கள். வருகிற ஆகஸ்ட் 7ந் தேதி முதல் 11ந் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகிறார்கள். ரஷிய கலாச்சார மையத்தில் நடக்கும் இந்த விழாவில் ரஷியா, ஜெர்மன், மலேசிய, கொரிய திரைப்படங்கள் உள்பட 25க்கும் மேற்பட்ட நாடுகளின் சிறந்த படங்கள் திரையிடப்பட உள்ளன.
வைர விழாவில் ஒரு பகுதியாக கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களுக்கும், திரைப்பட கலைஞர்களுக்கும் விருது வழங்குகிறார்கள். இதுதவிர கடந்த ஆண்டு வெளிவந்த குறும்படங்களையும் தேர்வு செய்து விருது வழங்க இருக்கிறார்கள். இனி ஆண்டுதோறும் விருது வழங்கும் விழா நடத்தவும் முடிவு செய்திருக்கிறார்கள்.